குமரி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பன்றி பண்ணைகளை ஆய்வு செய்து, அனுமதி இல்லாத பண்ணைகளை உடனடியாக அகற்றிட வேண்டும். மீறி செயல்படும் பண்ணைகளுக்கு கழிவுகளை கொண்டு வரும் முகவர்கள் மீது அபராதம் விதிப்பதோடு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபட வேண்டும். மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் எங்கு கழிவுகள், குப்பைகள் குவிந்துள்ளதாக நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக புகார்கள் வரப்பெற்றால் அதன் பொறுப்பு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா உத்தரவை பிறப்பித்துள்ளார்.