தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை எல்ஐசி காலனி பகுதியில் ட்ரீம்ஸ் ஸ்பா என்ற பெயரில் பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் சென்டர் ஆகியவற்றை அபிசத்யா (35) என்பவர் நடத்தி வந் தார். இங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடப் பதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இன்ஸ்பெக்டர் (பொ) சந்திரா மற்றும் போலீசார் ட்ரீம்ஸ் ஸ்பாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது திருவண்ணாமலை, குளித் தலை, பண்ருட்டி ஆகிய பகுதியை சேர்ந்த 4 பெண் களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரிய வந்தது. ஸ்பா உரிமையாளரான பட்டதாரி பெண் அபிசத்யாவை போலீசார் கைது செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்க ளையும் மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்