குற்றாலத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் குற்றாலம் கோயில்

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் குற்றாலம் கோயில்

Update: 2025-01-13 11:15 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றாலநாதர் சுவாமி ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் தினமும் சுவாமி அம்மாள் பல்லாக்குகளில் வீதி உலாவும் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 9ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவிற்காக கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News