கருங்குழி பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா

கருங்குழி பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா

Update: 2025-01-13 11:21 GMT
கருங்குழி பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கருங்குழி பேரூராட்சி ஊழியர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பேரூராட்சி வளாகத்தில் புதிய பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என பொங்கல் வைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். இதையடுத்து பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து புத்தாடை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி பேரூராட்சி துணைத் தலைவர் சங்கீதா சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News