தேசிய நெடுஞ்சாலை சென்டர் மிடலில் ஆபத்தான நிலையில் நிற்கும் கண்டெய்னர் லாரி
தேசிய நெடுஞ்சாலை சென்டர் மிடலில் ஆபத்தான நிலையில் நிற்கும் கண்டெய்னர் லாரி
அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலை சென்டர் மிடலில் ஆபத்தான நிலையில் நிற்கும் கண்டெய்னர் லாரி பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு கண்டெய்னர் லாரியை மீட்க வேண்டும் என கோரிக்கை சென்னையில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கண்டனர் லாரி சென்று கொண்டு இருந்த பொழுது கண்டெய்னர் லாரியின் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மிடலில் நின்றுள்ளது. இந்த கண்டெய்னர் வாகனம் சென்டர் மிடியனில் ஆபத்தான நிலையில் நின்று கொண்டு உள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாய நிலையானது ஏற்பட்டுள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு அச்சரப்பாக்கம் காவல்துறையினர் இந்த கண்டெய்னர் வாகனத்தை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.