நவோதயா பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்.
நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்.
ஜனவரி 13 நாமக்கல் கீரம்பூரில் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழரின் கலாச்சார முறைப்படி வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு, கோமாத பூஜை என சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவியர்களின் ஆடல், பாடல் என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொங்கல் விழா சிறப்பு குறித்து மாணவ மாணவியர்கள் உரையாற்றினார்கள். இந்த பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் சிவபாக்கியம் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தின் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பொங்கல் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஓட்டுநர்கள் மற்றும் ஆண்டிஸ் அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக புத்தாடை வழங்கி பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர்கள், ஓட்டுநர்கள், ஆண்டிஸ் மற்றும் இதர பணியாளர்கள் அனைவருக்கும் தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பள்ளியின் பொங்கல் விழா நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகி (Chair Person) . சரஸ்வதி தர்மலிங்கம், செயலாளர் தனபால், பொருளாளர் கா.தேனருவி, இயக்குநர் சண்முகம், கவியரசு, பள்ளி முதல்வர் ஆண்டனிராஜ் அனைவரும் கலந்து கொண்டனர் மாலை 3 மணியளவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியோடு பொங்கல் வாழ்த்துக்கள் கூறி நிறைவு செய்தனர்.