பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா, விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கல்
பொங்கல் விழா
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மேலும், செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, செல்லப்பன் பேட்டை, புதுக்குடி, ராயமுண்டான்பட்டி ஆகிய கிராமங்களிலும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில், பொதுமக்கள், பள்ளி மாணவர்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் சிறந்த விவசாயி ஒருவரை தேர்வு செய்து அவருக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கப்பட்டது. பொங்கல் விழாவையொட்டி மாணவர்களின் சிலம்பாட்டம், பறையாட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட சுற்றுச்சூழல் துறை முதன்மை பொறியாளர் வேதா மாதவன் செங்கிப்பட்டியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று வாழ்த்தினார். நிகழ்வுகளில், பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.ஸ்ரீவித்யா, அனைத்து துறையைச் சார்ந்த முதன்மையர்கள், இயக்குனர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பசுமைப் பொங்கல் விழாவை கொண்டாடினர்.