வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா மற்றும் ஆண்டு விழா

வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா மற்றும் ஆண்டு விழா

Update: 2025-01-13 14:32 GMT
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 2000 ஆம் ஆண்டில் தொடங்கி 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு இரண்டு நாட்களும் நான்கு விழாக்களாக மிகக் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. சனிக்கிழமை அன்று வெள்ளி விழா ஆண்டின் மலர் வெளியீட்டு விழா தொடங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக RTN. த P.R. சௌந்தரராஜன் மற்றும் இராசிபுரம் நகரமன்றத் தலைவர் திருமதி முனைவர் R. கவிதாசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். வெள்ளி விழா மலரை சிறப்பு விருந்தினர் RTN. P.R. சௌந்தரராஜன் அவர்கள் வெளியிட திருமதி கவிதாசங்கர் பெற்றுக்கொண்டு, மின்னூல் செயலியை தொடங்கி வைத்தார். மாலை வெள்ளி விழாவின் பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது. விழாவின் தொடக்கமாக சிறப்பு விருந்தினராக முனைவர் Dr. A. இளங்கோவன், பள்ளி இயக்குநர்கள் மற்றும் இரு பள்ளி முதல்வாகள் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர். XII ஆம் வகுப்பை சேர்ந்த M. சுகிதா வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் திருமதி. T. சித்ரா அவர்கள் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். பள்ளியின் தாளாளர் RTN. S. பிரகாஷ் தலைமைஉரை ஆற்றினார். பள்ளியின் செயலாளர் RTN P. சீனிவாசன் அவர்கள் பள்ளியின் 25 ஆண்டுகால வளர்ச்சியைப் பற்றி உரையாற்றினார். பள்ளியின் இயக்குநர் C. சுந்தரராஜீ அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். பள்ளியின் இயக்குநர்கள் R. கணேசன் மற்றும் R. இளையப்பன் இருவரும் இணைந்து சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை வழங்கினர். இதனைத் தொடர்ந்து பள்ளி ஆண்டுவிழாவின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வண்ண உடைகள் அணிந்து நடனமாடினார். அதில் பாரதநாட்டியம், காட்டுவாசி நடனம். அம்மன் நடனம், தமிழ் நாடகம் மற்றும் பல்வேறு விதமான நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. XII ஆம் வகுப்பு மாணவி K. கனிஷ்கா ஸ்ரீ நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் பள்ளியின் இயக்குநர்கள், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Similar News