சேந்தமங்கலம்: அரிமா நிறுவனர் பிறந்தநாளை முன்னிட்டு பசிப்பிணி போக்கும் சேவைத் திட்டம் தொடக்கம்!
முன்னாள் அரிமா ஆளுநர் எஸ்.எம்.ஆர்.குமரேசன் தலைமையேற்று இந்நிகழ்வை துவக்கி வைத்தார்
அரிமா நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு சேந்தமங்கலம் கிழக்கு தெருவில் உள்ள தீரன் சின்னமலை வளாகத்தில் பொன்னார் குளம் அரிமா சங்கம் சார்பில் பசிப்பிணி போக்கும் வகையில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.மாவட்ட முன்னாள் அரிமா ஆளுநர் எஸ்.எம்.ஆர்.குமரேசன் தலைமையேற்று இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் தமிழ் நாடு கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.பாலாஜி,முன்னாள் கவுன்சிலர்கள் அரிமா நடராஜன், அறிவு என்கிற முருகேசன்,மணி,நடேசன்,சரவணன்,சந்திரன் மற்றும் முருகன் உள்ளிட்ட அரிமா உறுப்பினர்கள்,அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.