கிருஷ்ணகிரி: அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி: அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Update: 2025-01-22 00:43 GMT
கிருஷ்ணகிரி அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், பூத் கிளை கமிட்டி உறுப்பினர்கள், விளையாட்டு அணி அமைப்பது மற்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்காக பணியாற்று வது குறித்து, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். இதில், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனுசாமி எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசா மியை முதல்-அமைச்சராக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News