தோரணக்கல்பட்டி- மது போதையில் வீட்டில் பொருத்திய ஓட்டு வில்லைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்திய நபர் கைது.
தோரணக்கல்பட்டி- மது போதையில் வீட்டில் பொருத்திய ஓட்டு வில்லைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்திய நபர் கைது.
தோரணக்கல்பட்டி- மது போதையில் வீட்டில் பொருத்திய ஓட்டு வில்லைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்திய நபர் கைது. கரூர் மாவட்டம் தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சுப்புலட்சுமி வயது 44 . அருகில் உள்ள தோரணக்கல் பட்டியில் இவருக்கு சொந்தமான ஓட்டுவில்லை பொருத்திய வீடு உள்ளது. இவரது உறவினர் தோரணக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் வயது 35 என்பவர், ஜனவரி 19ஆம் தேதி காலை எட்டு மணி அளவில் மது போதையில் சுப்புலட்சுமிக்கு சொந்தமான வீட்டின் ஓடுகளையும், வீடு மராமத்து பணிக்காக வைத்திருந்த கட்டுமான பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட சுப்புலட்சுமியை சுரேஷ் தகாத வார்த்தை பேசி மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சுப்புலட்சுமி அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மது போதையில் தகாத செயலில் ஈடுபட்ட சுரேஷை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.