சிவன்மலையில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

சிவன்மலையில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை காங்கேயம் காவல்துறை விசாரணை

Update: 2025-01-22 05:55 GMT
காங்கேயம் அருகே சிவன்மலையைச் சேர்ந்தவர் சேகர் (வயது 41). தொழிலாளி இவரது மனைவி மாரியம்மாள் (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 5 வருடங்களாக மனைவி மாரியம்மாளுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவம் பெற்று வந்துள்ளார். சேகர் அவரது மகள்களின் வாழ்க்கை நினைத்து மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சேகர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News