விசைத்தறி கூடத்திற்கு தீ வைத்த வாலிபர் கைது

பல்லடத்தில் விசைத்தறி கூடத்திற்கு தீ வைத்த வடமாநில வாலிபர் கைது

Update: 2025-01-22 05:43 GMT
பல்லடம் பணப்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் உள்ளது. கடந்த 17ஆம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது இதில் உற்பத்தி செய்யப்பட்டு வைத்திருந்த காடா துணிகள் மற்றும் விசைத்தறி இயந்திரங்கள் ஆகியவை தீப்பிடித்து எறிந்தது. இந்த தீ விபத்தில் அங்கு பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நிரோஜ் (வயது 21) என்பவர் காயமடைந்தார். இது குறித்து பல்லடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை பதிவானதை வைத்து விசாரணை செய்த போது மர்ம நபர் ஒருவர் விசைத்தறி கூடத்தில் உள்ள ஜவுளி துனிகளுக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது அங்கு பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திராஜ் பேஜ் (வயது 35) என்பதும் அதே விசைத்தறி கூடத்தில் அவரது சகோதரர் நீரோஜ் என்பவருடன் பணிபுரிந்து வந்ததும் சம்பவத்தன்று அவர்களுடைய வாய் தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த தீரஜ் பேஜ் ஜவுளி துணிகளுக்கு தீ வைத்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Similar News