கோவில் குளத்தில் பாசி படிந்து தண்ணீர் மாசு
வாரணவாசி கோவில் குளத்தில் பாசி படிந்து உள்ளதை அகற்றி, பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமாக்க வேண்டும் என கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது வாரணவாசி கிராமம். இந்த கிராமத்தில், பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே ஊராட்சிக்கு சொந்தமான இரண்டுஏக்கர் பரப்பிலான பொதுக்குளம்உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும்மக்கள் இக்குளத்தின் நீராடுவதோடு, கோவில் விழா காலங்களில் குளத்தின் நீரை கொண்டு பூஜைகள் செய்கின்றனர். கடந்த சில மாதங்களாக குளத்தின் தண்ணீரில் பாசி படிந்து, தண்ணீர் மாசடைந்து பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால், கோடைக்காலத்தில் இந்த குளத்தில் தண்ணீர் இருந்தும், நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வாரணவாசி கோவில் குளத்தில் பாசி படிந்து உள்ளதை அகற்றி, பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமாக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.