சங்கரன்கோவில் அருகே சிறு கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம்
சிறு கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பழங்கோட்டை, கே. ஆலங்குளம், புதுக்குளம். பணவடலிசத்திரம், வடக்குஅச்சம்பட்டி, திருவேங்கடம், சேர்ந்தமரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தை மாத சிறுகிழங்கு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மேலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடப்பட்ட சிறுகிழங்கு அறுவடை செய்யப்பட்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3ஆயிரத்து 500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து சிறு கிழங்குக்கு விலை உயர்த்தி தர வேண்டுமென அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.