தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் பட்டுரோசா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டி.ராஜேந்திரன், துணை செயலாளர் ராஜேந்திரன், தனசேகர், பொருளாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது மேற்பட்டவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.