கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் உள்ள உணவு அங்காடிகள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்.
கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் உள்ள உணவு அங்காடிகள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்.;

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், 2-வது நாளாக இன்று 30.01.2025 கிருஷ்ணகிரி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில், தூய்மை பணிகள், பயணிகளுக்கான கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள உணவு அங்காடிகள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். உணவுப்பொருட்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.