108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பராமரிக்க நடவடிக்கை தேவை
108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
அரியலூர், பிப். 20- தமிழகம் முழுவதும், பல்வேறு குறைபாடுகளுன் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரிலுள்ள ஒரு தனியார் கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அச்சங்க மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: அரியலூர் மாவட்டத்தில், குளறுபடிகளுடன் இயங்கி வரும் ஆம்புலன்ஸ் குறித்து புகார் அளிக்கும் தொழிலாளர்களை பயிற்சி அல்லது விசாரணை என்று கூறி திருச்சிக்கு அழைத்துச் சென்று மிரட்டும் அரியலூர் மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட வாகன பராமரிப்பு மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 108ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளை மூடி மறைப்பதற்காக, தொழிலாளர்கள் உரிய நேரத்தில் வேலைக்கு வரவில்லை என்று பொய் கரணம் காட்டி அவர்களது ஊதியத்தை பிடித்தம் செய்யும், இ.எம்.ஆர்.ஐ. ஜிஎச்எஸ் நிர்வாகத்தை கண்டிப்பது என்பன என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெள்ளிவேல் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரம், திருவள்ளுவர் ஞானமன்றத் நிறுவனர் இராவணன் மற்றும் சங்க மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் மாவட்டத் தலைவராக செந்தில்குமார், தணைத் தலைவர்களாக கொளஞ்சியப்பன், கலியசாமி, செயலாளராக வெங்கடேசன, துணைச் செயலாளர்களாக வீரமணிகண்டன், இளையப்பெருமாள், பொருளாளராக எழிலரசி உள்ளிட்டோர் தேர்தெடுக்கப்பட்டனர்.