நாமக்கல் மாநகராட்சியில் வரிபாக்கி நிலுவையில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி எச்சரிக்கை!

பொதுமக்களின் வசதிக்காக அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையங்கள் இயங்கும்.;

Update: 2025-01-30 14:06 GMT
நாமக்கல் மாநகராட்சியில் வரிபாக்கி நிலுவையில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி எச்சரிக்கை!
  • whatsapp icon
நாமக்கல் மாநகராட்சியில் அதிக வரிபாக்கி நிலுவையில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.... நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி. காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில் இன்றுவரை 49 சதவீதத்தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டு மீதம் 51 சதவீதத்தொகை நிலுவையாக உள்ளது.
மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாய்கள் உரிய காலங்களில் வசூல் செய்யதால் மட்டுமே மாநகரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய குடிநீர் விநியோகம், திடக்கழிவு பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உரிய முறையில் மேற்கொள்ள இயலும். பொதுமக்களில் பெரும்பாலானோர் வரி மற்றும் கட்டணங்களை மார்ச் மாதம்தான் செலுத்த வேண்டுமென தவறுதலாக கருதி வருகிறார்கள். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திருத்திய சட்டம் 2023இன்படி 2024-2025ஆம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்குரிய தொகையினை முழுவதுமாக 31.10.2024க்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
எனவே இன்னும் தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக நிலுவையின்றி செலுத்தி மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையங்கள் இயங்கும். உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக துண்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்டரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எனவே மாநகராட்சியின் கடுமையான நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்தி ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Similar News