அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் அறிமுக விழா.
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தரும், அனைவர்க்கும் உயர் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான கோ. விசுவநாதன் வெளியிட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பெற்றுக்கொண்டார்.;

திருவண்ணாமலையில் நடைபெற்ற அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் திருவண்ணாமலை மாவட்ட அறிமுக விழாவில் செய்தி மடலை வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தரும், அனைவர்க்கும் உயர் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான கோ. விசுவநாதன் வெளியிட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது போளூர் சட்டமன்றத் உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.