தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை தஞ்சை மாநகரம் சார்பில், தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் என்.குருசாமி, மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர், மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள் இரா.புண்ணியமூர்த்தி, மக்கள் ஒற்றுமை மேடை ப.சத்தியநாதன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, செயின்ட் மேரீஸ் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வசந்தம் லயன்ஸ் சங்கத் தலைவர் சம்பத் தலைமை வகித்தார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர் முன்னிலை வகித்தார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் என்.குருசாமி மக்கள் ஒற்றுமை உறுதிமொழி வாசித்தார். பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில், குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
