களம்பூர் : தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி பேரணி.
மருத்துவமனை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.;

மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சார்பில் களம்பூர் அரசு மருத்துவமனை இணைந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெகன் தலைமையில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் பேரணியாக சென்றனர்.