விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமைகாவலர் லோகநாதன் (வயது 36) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்,சப்-இன்ஸ்பெக்டர் சுதன் என்பவருடன், ரெயில்வே ஒத்தக்கண் பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது குடிபோதையில் பொது இடத்தில் பிரச்சினை செய்து கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர் போலீஸ்காரர் லோகநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இதையடுத்து, அந்த வாலிபரை போலீஸ் நிலையத் துக்கு பிடித்து வந்து விசாரித்தனர். அதில், திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை புதுகாலனி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் மகன் அமல்ராஜ் (34) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.