விக்கிரவாண்டி அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை;
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் பழைய காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 75), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அப்பகுதி சுடுகாட்டில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.