திருக்களாச்சேரிபகுதியில் பெய்தமழையால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டையில் நனைந்தது

Update: 2025-02-28 11:54 GMT
. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் 170 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 28 ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனிடையே மாவட்டத்தில் நள்ளிரவு முதல் மழை செய்ய தொடங்கியது. இதனால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் பல்வேறு இடங்களில் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. தரங்கம்பாடி பகுதியில் பெய்த 20மி.மி.மீ. மழையால் திருக்களாச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள திறந்தவெளி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கொள்முதல் நிலையங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வடிய வழியில்லாததால் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கி விடும் எனவும் விவசாயிகள் வேதனை அடைகின்றனர். இதனுடைய ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சாலையில் பெயர்த்து தண்ணீரை வடிய வைக்கும் பணியில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அரசு போதிய அளவில் தார்ப்படுதாக்கள் வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், கொள்முதலின்போது ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், நிரந்தர கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News