சீர்காழி போக்சோ வழக்கு விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை
மயிலாடுதுறை அருகே மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உண்மையான குற்றவாளியை மறைத்து அங்கன்வாடி ஆசிரியர் அளித்த பொய்யான தகவலை வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதி விசாரணைக்கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அங்கன்வாடிக்குச் சென்ற சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவத்தில் அவரது உறவினர் சிறுவன்மீது போக் சோ வழக்கப் பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கன்வாடி ஊழியரின் பொய்யான தகவலின்படி விசாரணை செய்யாமல் சகோதரர் உறவுமுறை சிறுவன்மீது நடவடிக்கை எடுத்தது தவறு என்றும் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம நாட்டாண்மைகள் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகார் மனுவில், சம்பவத்தன்று சிறுமியை வழக்கம்போல அழைத்துச் செல்லும் அங்கன்வாடி ஆசிரியர் அழைத்து சென்றுள்ளார். அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு, அங்கன்வாடி ஆசிரியர் வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனிடம் சென்று உனது தங்கையை காணவில்லை தேடிப் பார்க்க வேண்டும் என அழைத்துச் சென்று உள்ளார். அவரை அழைத்து சென்ற பிறகு அவரைத் தேட சொல்லி அங்கன்வாடி சுவர் அருகில் சத்தம் கேட்பதாக கூறி சிறுவனை பார்க்கச் சொல்லியுள்ளார். சிறுவன் சுவரின் மீது ஏறி பின்புறம் குதித்து பார்த்துவிட்டு எனது தங்கையை அடித்து காயப்படுத்தி உள்ளார்கள் என்று சொன்னவுடன், இரண்டு பேர் அந்த சிறுவனை பிடித்து கை மற்றும் கால்களை கட்டி நீதான் அடித்தாய் எனக் கூறி மரத்தில் கட்டி வைத்தார்கள் என்பது தெரிய வருகிறது.