சோளிங்கர்:கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது;
சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் செல்லும் சாலையில் வாலிபர் ஒருவர் கையில் கத்தி வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதுடன், போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வீராணத்தூர் காலனி பகுதியை சேர்ந்த லக் என்கிற ஞானசேகர் (வயது 26) என்ப தும், ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் இவர் மீது திருட்டு, அடிதடி வழக்கு இருப்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.