வாணியம்பாடியில் பழமை வாய்ந்த நீதிமன்ற கட்டிடம் மேல்தள பூச்சி திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

வாணியம்பாடியில் பழமை வாய்ந்த நீதிமன்ற கட்டிடம் மேல்தள பூச்சி திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு;

Update: 2025-03-27 05:55 GMT
  • whatsapp icon
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பழமை வாய்ந்த நீதிமன்ற கட்டிடம் மேல்தள பூச்சி திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு புதிய நீதிமன்ற கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கும் வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுப்படுவதாக வழக்கறிஞர்கள் பேட்டி திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடியில் உள்ள அரசின் தோட்ட வாளகத்தில் கடந்த 120 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை குற்றவியல் நீதிமன்றம் கட்டிடமானது தற்போது, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்த நிலையில், புதிய நீதிமன்ற கட்டிடம் வேண்டி வழக்கறிஞர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரையில் புதிய கட்டிடங்கள், கட்டும் பணி நடைபெறாமலும், மாற்று இடம் கிடைக்காததால் நீதிமன்ற வழக்குகள் பழைய கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது, இந்நிலையில் இன்று நீதிமன்றம் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பழைமையான கட்டிடத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள கட்டிடத்தின் மேல்தளப்பூச்சி திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. மேலும் நல்வாய்ப்பாக மேல்தளப்பூச்சி பெயர்ந்து விழும் போது மக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.. மேலும் இதுகுறித்து, வாணியம்பாடி பார் அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் தேவக்குமார் தெரிவிக்கையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போதிலிருந்து, வாணியம்பாடியில் மட்டுமே ஒருங்கிணைந்த நீதிமன்றம் இதுவரையில் இல்லையெனவும், இதுவரையில் துறைசார்ந்த அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும், இதுவரையில் அம்மனுக்கள் பரிசீலிக்கப்படாமலேயே இருக்கின்றது, தற்போது வாணியம்பாடியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 120 ஆண்டுகாலம் ஆங்கிலேயர்களால், கட்டப்படதாகவும், இந்த கட்டிடத்தில் ஏற்கனவே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அப்போது போராட்டத்திற்கு பிறகு, கட்டிடம் பழுதுபார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இன்று நீதிமன்றத்தில் அமர்வு இல்லாத போது, இந்த கட்டிடம் மேல்தளம் பெயர்ந்து விழுந்துள்ளதாகவும், இன்று நீதிமன்ற அமர்வு இருந்திருந்தால், உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் எனவும், தொடர்ந்து கோரிக்கை வைத்தும், புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது, இந்த கட்டிடம் வசிக்க தகுதியற்றது என சான்று வழங்கப்பட்டும், சிறிது பழுது பார்க்கப்பட்டது, இந்த விபத்திற்கு பிறகு உடனடியாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கும் வரை தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாகவும், வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது

Similar News