சேலம் மத்திய மாவட்டத்தில் தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்
அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை;
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதியான ரூ.4 ஆயிரத்து 34 கோடியை கடந்த 4½ மாதமாக மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் மத்திய கண்டித்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி, காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வேப்பிலை ஊராட்சியிலும், காடையாம்பட்டி மேற்கு ஒன்றியத்தில் தீவட்டிப்பட்டி பஸ் நிலையத்திலும், காருவள்ளியிலும், ஓமலூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கொல்லப்பட்டி ஊராட்சி தட்டாஞ்சாவடியிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதேபோல் ஓமலூர் வடக்கு ஒன்றியத்தில் பொட்டியபுரம், வெள்ளாளப்பட்டியிலும், தெற்கு ஒன்றியத்தில் முத்துநாயக்கன்பட்டி, தொளசம்பட்டியிலும், தாரமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் செலவடை ஆவின் பாலகம் அருகே, கே.ஆர்.தோப்பூர் பவர்கிரிட் அருகேயும், சேலம் வடக்கு ஒன்றியத்தில் சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகேயும், மல்லமூப்பம்பட்டி மூலக்கடை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளை சேர்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய பகுதி, பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.