சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவில்
பாலாபிஷேகம் நடைபெற்றது.;
சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 7.30 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து 8 மணிக்கு சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக எல்லைப்பிடாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் காலை 9.15 மணிக்கு அம்மனுக்கு 108 சங்கு பூஜை நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு சத்தாபரணம் நடக்கிறது. தொடர்ந்து கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.