திருப்பத்தூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
நகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்து முகம் நடைபெற்றது;

திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தனியார் மருத்துவமனை உதவியுடன் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரத்த கொதிப்பு சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்ட பின்பு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு தகவல்களையும் இனிமேல் மருத்துவ காப்பீடு அட்டையை பயன்படுத்த நீண்ட தூரம் பயணம் செய்து வெளியூர்களுக்கு சென்று மருத்துவமனைகளை தேட வேண்டாம். திருப்பத்தூர் மாவட்டத்திலேயே பல்வேறு மருத்துவமனைகள் உள்ளன என்பது குறித்த தகவல்களையும் எடுத்து கூறினார். நகராட்சி ஆணையர் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த இலவச மருத்துவ முகாமில் நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.