ஜோலார்பேட்டையில் கஞ்சா பறிமுதல்

ஜோலார்பேட்டையில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் போலீசார் விசாரணை;

Update: 2025-03-30 00:20 GMT
  • whatsapp icon
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்... ரயில்வே போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரயில்வே குற்ற தடுப்பு தனிப்படை போலீசார் டாட்டா நகர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கழிவறை அருகே கேட்பாரெட்டு கிடந்த மூன்று பைகளில் சோதனை செய்தபோது அதில் 10 சிறிய சிறிய பெண்டல்களில் 13 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்து இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... மேலும் இந்த கஞ்சாவை யார் கடத்தி வந்தது எங்கிருந்து எங்கு கொண்டு சென்றார்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News