சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருப்பத்தூரில் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை;

திருப்பத்தூர் மாவட்டம் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதூர் நாடு பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (வயது 35). இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஆம்பூர் பகுதியில் நாடகம் நடிக்க சென்றபோது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் பழகி அவரிடம் இருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி பரமசிவத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சிறுமியை கடத்தி சென்றது, நகை, பணம் பறிப்பு, கொலை செய்து சடலத்தை மறைத்தது உள்ளிட்ட வழக்குகளின் மீது கூடுதலாக 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.