பெருமாபட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பெருமாபட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு;

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெருமாபட்டு கிராமத்தில் எருதுவிடும் திருவிழா கடந்த சனிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் திருவிழாவில் எருது முட்டியதில் மாடப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் புரத்தை சேர்ந்த கவந்தமணி மகன் ரஞ்சித் குமார் (37) என்பவர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். மேலும் படுகாயம் அடைந்த ரஞ்சித் குமாரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் உயிரிழந்தார். மேலும் எருதுவிடும் திருவிழாவின் போது இளைஞர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.