சிலால் கிராமத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
சிலால் கிராமத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.;
அரியலூர் மே.15- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், சிலால் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் அரசின், "நாடு போற்றும் நான்காண்டு -சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய கழக பொறுப்பாளர் தன.சேகர் தலைமை வகித்தார். ,கிளை கழக செயலாளர் கருணாநிதி வரவேற்றார். தலைமை கழக சொற்பொழிவாளர் குத்தாலம் அன்பழகன் ,தலைமை கழக இளம் பேச்சாளர் ஷேக் அலிமாஷ் அலி, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், உடையார்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், கழக தோழர்கள்,பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக கிளை கழக செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.