அரியலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2025-06-14 04:57 GMT
அரியலூர், ஜூன் 14 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரிலுள்ள  நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணிக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பைரவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எம்.கே. ஷேக் தாவூத் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.  சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் காந்தி, செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க மாநில துணைத் தலைவர் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஏ.எஸ்.ஆர்.அம்பேத்கர், மாநில துணைத் தலைவர் ச.மகேந்திரன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி உள்ளிட்டோர்  கலந்து  கொண்டு முழக்கமிட்டனர். :

Similar News