பழைய பேப்பர் கடையில் தீ விபத்து. பரபரப்பு
மதுரை ஓபரா படித்துறை பகுதியில் பழைய பேப்பர் கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று வேன்கள் எரிந்து நாசமாகின.;
மதுரை வைகையாற்றின் தென்கரை பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் இருக்கும் PAS மீன் கடை அருகில் பழைய பேப்பர் ,அட்டை குடோனில் இன்று (ஜூலை .9)காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . இதில் பேப்பர் குடோனின் நிறுத்தி வைக்கப்பட்ட 3 டாட்டா ஏசி வண்டிகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. 1/2 நேரத்துக்கு பிறகு வந்த நான்கு தீயணைப்பு வண்டிகள் தீயை அணைத்தனர்.அதுவரை மக்கள் தீயணைத்துக் கொண்டிருந்தனர். எதனால் தீ விபத்து ஏற்பட்டது. சேத மதிப்பு குறித்து விளக்குதூண் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.