கழிவுநீர் சாக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை கொட்டினால் அபராதம் சேர்மன் எச்சரிக்கை
கழிவுநீர் சாக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை கொட்டினால் அபராதம் சேர்மன் எச்சரிக்கை;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேற்று பெய்த மழையின் காரணமாக சாக்கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கேரி பேக்குகள் அடைத்துக் கொண்டதால் மழை நீர் செல்ல முடியாமல் திருச்செங்கோடு ஸ்டேட் பாங்க் அருகே சாலையில் வெள்ளநீர் குளம் போல் தேங்கியதைத் தொடர்ந்து இன்று நகராட்சி சார்பில் தூய்மை பணி நடத்தப்பட்டது. இந்த பணியை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு மேற்கொண்டார். சாக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆய்வின் போது நகராட்சி துப்புரவு அலுவலர் சோலை ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் மனோன்மணி சரவணன் முருகன்,ரமேஷ்,ரவிக்குமார், தாமரைச்செல்வி மணிகண்டன், செல்லம்மாள் தேவராஜன் திவ்யா வெங்கடேஸ்வரன், வழக்கறிஞர் சுரேஷ்பாபு, சரவண முருகன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்