புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை

பாலக்கோட்டில் 9வது வார்டு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை;

Update: 2025-07-12 08:45 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு அருந்ததியர் தெரு பகுதியில் வெகு நாட்களாக மண் சாலையை மாற்றி அமைத்து புதியதாக பேவர் பிளாக் சாலை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், பேரூராட்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க பேரூராட்சி தலைவர் பிகே முரளி தலைமையில் இன்று பூமி பூஜை பணி நடைபெற்றது உடன் பேரூராட்சி உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்

Similar News