போட்டித் தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் அரசு போட்டி தேர்வு ( குரூப் 4 ) மையங்களில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் ஆய்வு;
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வினைத்தால் நடத்தப்படும் தொகுதி 4 (குரூப் 4) பதிவுகளுக்கான போட்டி தேர்வுகள் இன்று நடைபெற்றது இதனை அடுத்து தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அதியமான் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம், இலக்கியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம், உள்ளிட்ட தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.