கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, பக்தர்கள் சுவாமி தரிசனம்
கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, பக்தர்கள் சுவாமி தரிசனம்;
செங்கல்பட்டு மாவட்டம்,திருவடிசூலம் பகுதியில் அமைந்துள்ள ஆதிசக்தி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் மகா ஆரண்ய சேஷாத்திரம் 51 அடிஒரே கல்லில் ஆன விஸ்வரூப தேவிக்கு கடந்த 7ஆம் தேதி மூக்கன் திறப்பு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு 10 ஆம் தேதி அன்று கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக யாகசாலை தொடங்கி மகாகும்பாபிஷேகம் தொடர்ந்து வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு நிறைவு நாளான நேற்று 4 ஆம் கட்ட வேள்வி பூஜைகளுடன் துவங்கி மகா பூர்ணாகுதி நடத்தப்பட்டு கலச புறப்பாடு நடைபெற்றது. இதனிடையில் 51 அடி ஒரே கல்லில் ஆன பிரம்மாண்ட உயரம் கொண்ட ஆதிசக்தி தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு கொடையாளர்கள் மூலம் 13 கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளிகளால் ஆன கவசங்கள் கொடையாக ஸ்ரீ.ஸ்ரீ.மதுரை முத்து சுவாமி யிடம் அளிக்கப்பட்டது.பின்னர் கலசங்கள் புறப்பட்டு ஆறாம் தலைமுறை மறுளாளர் தேவி குபயோகி ஸ்ரீ.ஸ்ரீ.பூ.மதுரை முத்து சுவாமிகள் தலைமையில் அம்மனுக்கு 1008 புனித கலசங்கள் மூலம் பால், மஞ்சள், சந்தனம், தேன், வாசனை திரவிய குடங்கள் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழக மக்கள் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து வந்தும் பொங்கல்கள் வைக்கும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். இந்த கும்பாபிஷேகத்தின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணை பிளக்கும் அளவிற்கு ஓம் சக்தி பராசக்தி கோஷமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சினிமா பட நடிகர்கள் தாமு, கஸ்தூரி, உட்பட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.