காமராஜரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை
கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள்;
பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சூலை 15 இன்று தலைமை ஆசிரியர் அமுதா தலைமையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. காமராஜரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது . மாணவர்கள் பலரும் கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரை பற்றி பேசினர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. உதவி ஆசிரியர் மைனாவதி, மற்றும் செங்குணம் குமார் அய்யாவு உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்