பெரம்பலூர் நகர ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனைக் கூட்டம்
தமிழ் மொழி, இனம், மண் காக்க, உறுப்பினர் சேர்க்கை குறித்து பெரம்பலூர் நகரத்துக்கு உட்பட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
பெரம்பலூர் நகர ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் தமிழ் மொழி, இனம், மண் காக்க, உறுப்பினர் சேர்க்கை குறித்து பெரம்பலூர் நகரத்துக்கு உட்பட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி பார்வையாளர் தங்க சித்தார்த்தன் மற்றும் மகளிர் அணி அமைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.