செங்குணம் கிராமத்தில் கோயில் வளாகத்தை சுற்றி தூய்மை பணியாளர்கள் பணி தீவிரம்

கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைப்பெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் கோரிக்கையின் படி ஊராட்சி பணியாளர்கள் கடந்த சில நாட்களாக வே கோவில் உட்பட திருவிழா நடைப்பெறும் பகுதிகளில் குப்பைகளை சுத்தம் செய்தல்;

Update: 2025-07-19 10:28 GMT
பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர்த் திருவிழா வரும் ஜூலை 21 முதல் ஜூலை 29 வரை நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைப்பெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் கோரிக்கையின் படி செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலக செயலர் கோவிந்தன் வழிகாட்டுதல்களின் படி ஊராட்சி பணியாளர்கள் கடந்த சில நாட்களாக வே கோவில் உட்பட திருவிழா நடைப்பெறும் பகுதிகளில் குப்பைகளை அகற்றிடும் பணியில் ஈடுபட்டனர்

Similar News