தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திடீர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய திட்டப்பணிகளை குறித்து தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் துரை.ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2025-07-19 16:21 GMT
பெரம்பலூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய திட்டப்பணிகளை குறித்து தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் துரை.ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டபணிகளான இயற்கைவள மேம்பாட்டுப்பணிகள், வேளாண் உற்பத்தி சார்ந்த பணிகள் மற்றும் வாழ்வாதாரப் பணிகளை ஆகியவை குறித்து தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் துரை.ரவிச்சந்திரன் 17.07.2025 மற்றும் 18.07.2025 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, வேப்பூர் மற்றும் பெரம்பலூர் வட்டாரங்களில் இயற்கைவள மேம்பாட்டு பணிகளின் கீழ் செயல்படுத்தப்படும் தடுப்பணை கட்டுதல், ஊரணி தூர்வாருதல், வரத்துவாரி தூர்வாருதல், நீர் உறிஞ்சும் குழாய் அமைத்தல் மற்றும் பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பணிகளை தரமாகவும் விரைவாகவும், திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு முடித்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், வேளாண்மை உற்பத்தி சார்ந்த பணிகளின் கீழ் விசைத்தளிப்பான், பேட்டரி தெளிப்பான், தீவனப்புல் நொறுக்கும் கருவி, களைஎடுக்கும் கருவி, பழமரக்கன்றுகள் நடவு, வேளாண் காடுகள் வளர்த்தல், மீன் வளர்ப்பு மற்றும் மண்புழு உரத்தொட்டி பெற்ற பயனாளின் பணிகளையும், வாழ்வாதாரப் பணிகளின் கீழ் தையல் இயந்திரம் பெற்ற பயனாளிகளிடம் வாழ்வாதாரம் பற்றியும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கியது பற்றியும், சம்மந்தப்பட்ட பயனாளிகளிடம் கலந்துரையாடலுடன் கூடிய ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்நிகழ்வுகளில், வேளாண்மை துணை இயக்குநர் (மு.கூ.பொ) சீ.தெய்வீகன், உதவிப்பொறியாளர் து.தமிழழகன், மற்றும் நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News