சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாரல் மழை

சுற்றுலா பயணிகள் உற்சாகம்;

Update: 2025-07-20 03:56 GMT
சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அதன்படி நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலையில் அங்கு சாரல் மழை பெய்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றனர்.

Similar News