சேலத்தில் சவிநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்;
அடுத்த மாதம் நடைபெறும் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம்(ஆகஸ்டு) 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநகரை பொருத்தவரை கடைவீதி, பொன்னம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.