இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
போலீசார் நடவடிக்கை;
தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்த–ானூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் யோகேஸ்வரி. இவரிடம், அதே முகாமை சேர்ந்த பிரவீன்குமார் (வயது30) என்பவர் கடனாக பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை யோகேஸ்வரி திருப்பி கேட்டுள்ளார். அப்போது பிரவீன்குமார் பணத்தை கொடுக்க மறுத்து யோகேஸ்வரியை தாக்கியுள்ளார். இதை யோகேஸ்வரியின் தங்கை சிவனேஸ்வரி தட்டி கேட்டுள்ளார். அப்போது அவரையும் பிரவீன்குமார் கல்லால் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர்.