ஓமலூரில் திருச்சி சிவா எம்.பி.யை கண்டித்து

த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-07-20 04:06 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை முன்பு சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் சுசீந்திரகுமார் தலைமை தாங்கினார். புறநகர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரகு நந்தகுமார், வட்டார தலைவர்கள் சேதுராமன், அய்யண்ணன், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி சிவா எம்.பி.யை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் அவரது உருவப்பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்துக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Similar News