குருவித்துறையில் திமுகவினரின் ஆலோசனை கூட்டம்.
மதுரை மாவட்டம் குருவித்துறையில் திமுகவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது;
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஒன்றிய துணைச் செயலாளர்கள், மற்றும் முக்கிய திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.